நிதியாண்டு 2025-26 புதிய வரி விதிப்பு முறை (New Tax Regime) - விளிம்புநிலை நிவாரணம் (Marginal Relief):
₹12 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கான விளிம்புநிலை நிவாரணம் குறித்த விளக்கம்.
வரி விகிதங்கள் (New Tax Regime - FY 2025-26):
₹0 - ₹4,00,000: வரி இல்லை (Nil).
₹4,00,001 - ₹8,00,000: 5% வரி (₹20,000 வரை).
₹8,00,001 - ₹12,00,000: 10% வரி (₹40,000 வரை)
₹12,00,001 - ₹16,00,000: 15% வரி.
₹12,00,000 வரையிலான மொத்த வரி ₹60,000 ஆகும்.
₹12,10,000 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹10,000 மட்டுமே (₹51,500 நிவாரணம்).
₹12,50,000 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹50,000 மட்டுமே (₹17,500 நிவாரணம்).
₹12,70,000 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹70,000 மட்டுமே (₹500 நிவாரணம்).
₹12,70,500 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹70,500 மட்டுமே (₹75 நிவாரணம்)
₹12,70,580 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹70,580 மட்டுமே (₹7 நிவாரணம்).
சுருக்கம் :
₹12,00,000-க்கு மேல் வருமானம் செல்லும் போது, கூடுதல் வருமானத்திற்கு மட்டுமே வரியாகச் செலுத்த இந்த விளிம்புநிலை நிவாரணம் வழிவகை செய்கிறது.
உதாரணமாக, வருமானம் ₹100 அதிகரித்தால் (₹12,00,100), வரி ₹100 மட்டுமே வசூலிக்கப்படுகிறது
0 Comments