டெட் - சிறப்பு தேர்வு.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் .
இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசும் சாதகமான பதிலை தெரிவித்துள்ளதாகவும் தகவல்.
இருப்பினும் தீர்ப்பின் தொடர் நடவடிக்கையாக தமிழக அரசு தற்போது பணியில் இருக்கும் பெரும்பாலான ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத சூழலில் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் ஆண்டிற்கு மூன்று முறை சிறப்பு தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது.
அதற்காக வார இறுதி நாட்களில் மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் மூலமாக பயிற்சி அளிக்கவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு - இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி - அரசு முதன்மைச் செயலாளர்
தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்காக மட்டும் முறைப்படியான ஆசிரியர் தகுதித் தேர்வுகளுடன் , 2026 ஆம் ஆண்டில் ஜனவரி 2026 , ஜூலை 2026 , மற்றும் டிசம்பர் 2026 ஆகிய மாதங்களில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளது.
2.எனவே , தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை ஆசிரியர் தகுதித் தேர்வு ( Special TET ) எழுத தயார் செய்யும் வகையில் அவர்களுக்கு மாவட்டந்தோறும் / வருவாய் வட்டம் / இணையவழியில் ( online ) மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ( DIETs ) அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்
0 Comments