இது ஒரு உண்மை நிகழ்வு...
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதுப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றைப் பெயர்த்து எடுத்துட்டு இருந்தார். ஜப்பான் நாட்ல பெரும்பாலும் வீடுகள் மரத்தாலேயே கட்டப்பட்டிருக்கும். இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.
வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதைப் பார்த்தார். அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்தப் பல்லியை சுற்றி பார்த்தார். வெளிப் பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி அதை நகரவிடாமல் செய்திருக்கிறது என்பதை அப்போது தான் கவனித்தார்.
அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது, '' அந்த ஆணி அடித்து குறைந்தது 3 வருடம் ஆகி இருக்கும். எப்படி இந்தப் பல்லி 3 ஆண்டுகள் உயிருடன் இருந்தது. இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும் '' என்று எண்ணி மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியைக் கண்காணித்துக் கொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதையும், அந்தப் பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக்கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதையும் பார்த்தார். அவருக்கு தூக்கி வாரிப்போட்டது. அதாவது 3 ஆண்டுகளாக இந்தப் பல்லி சுவற்றில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்திருக்கிறது.
ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் 3 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது. ஒரு பல்லியால் முடியும்போது, மனிதர்களாகிய நாம் எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாமல் உதவ முடியாதா என்ன...???
ஒரு பல்லியால் முடியும்போது ஏன் நம்மால் முடியாது ?
0 Comments