அமைச்சர்களின் உதவியாளர்களில் ஜாதிய ஆதிக்கம் கூடாது'பணியாளர்கள் பட்டியலை சரிபார்க்க முதல்வர் விஜய் உத்தரவு

அமைச்சர்களின் உதவியாளர்களில் ஜாதிய ஆதிக்கம் கூடாது'பணியாளர்கள் பட்டியலை சரிபார்க்க முதல்வர் விஜய் உத்தரவு

பத்திரிக்கைச் செய்தி
நியமிக்க தடை!

'அமைச்சர்களின் உதவியாளர்களில் ஜாதிய ஆதிக்கம் கூடாது'
பணியாளர்கள் பட்டியலை சரிபார்க்க முதல்வர் விஜய் உத்தரவு

தமிழகத்தில், 41 அரசு துறைகள் உள்ளன. முதல் வர் விஜய் தலைமையி லான அமைச்சரவையில், 34 அமைச்சர்கள் நியமிக் கப்பட்டு, அவர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட் டுள்ளன. அமைச்சரவை யில், காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு, வி.சி.க.. மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

அமைச்சர்களின் அலு வலகங்களில், அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், முதுநிலை உதவியாளர், சிறப்பு உதவி யாளர், வாகன ஓட்டுனர். அலுவலக கணினி அலுவ லர், தபேதார், பாதுகாப்பு போலீசார் உள்ளிட்ட பணிகளுக்கு. 400க்கும் மேற்பட்டோர் நியமனம் செய்யப்படுகின்றனர்.

'உதவியாளர்கள் நியமனத்தில், ஜாதிய ஆதிக்கம் கூடாது. அலுவலகப் பணியாளர்களை, ஜாதி, மத அடிப்படையிலோ, உறவு அடிப்படையிலோ நியமிக்காதீங்க' என, அமைச்சர்கள் அனைவருக்கும், முதல்வர் விஜய் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில், 41 அரசு துறைகள் உள்ளன. முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சர வையில், 34 அமைச்சர்கள் நிய மிக்கப்பட்டு, அவர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையில், காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு, வி.சி.க., மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

அமைச்சர்களின் அலுவலகங்களில், அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், முதுநிலை வாகன ஒட்டுனர், அலுவலக கணினி அலுவலர், தபேதார், பாது காப்பு போலீசார் உள்ளிட்ட பணி களுக்கு, 400க்கும் மேற்பட்டோர் நியமனம் செய்யப்படுகின்றனர்.

கவர்னர் மாளிகையில், அமைச்சர்கள் பொறுப்பேற்றவுடன், டிரைவருடன் கூடிய அரசு கார், அரசு சிறப்பு உதவியாளர், பாதுகாப்பு போலீசார் நியமனம் போன்றவை, உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டன.

 அமைச்சர்களும், தங்கள் ஜாதி மற்றும் மதத்தை சேர்ந்தவர்களை, தங்கள் அலுவலகத்தில் உள்ள பணியிடங்களில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இந்த தகவல், முதல்வர் விஜய் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. இதையடுத்து
அலுவலகங்களில், அமைச்சர் ஜாதி மற்றும் மத ரீதியில், அலுவலர்களை நியமிக்க அவர் தடை விதித்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, அரசு வட்டாரத்தில் கூறப்படுவதாவது:

தங்கள் ஜாதி மற்றும் மதத்தை சேர்ந்தவர்களை உடன் வைத்துக் கொண்டால், ரகசியங்கள் எதுவும் வெளியே செல்லாது என, முன்னாள் அமைச்சர்கள் நினைத் தனர். இதை மனதில் வைத்து, தி.மு.க., ஆட் சியில், அமைச்சர்கள் அலுவலகத்திற்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கை, த.வெ.க., ஆட்சியில் தொடரக்கூடாது என, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர்கள் அளிக்கும், அலுவலக பணியாளர்கள் பட்டியல், உளவுத்துறை போலீசார் வாயிலாக சரிபார்க்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது, போலீசில் ஏதேனும் வழக்கு நிலுவையில் உள்ளதா என்பது ஆராயப்படுகிறது. அதன்பின் உளவுத்துறை அளிக்கும் அறிக்கை அடிப்ப டையில், அமைச்சர்கள் அலுவலகங்களுக்கு பணியாளர்கள் நியமிக்கப்படுவர். அதற்கான அரசு உத்தரவை முதல்வர் பிறப்பிக்க உள்ளார்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Post a Comment

0 Comments