தினம் ஒரு கதை - பேச்சு திறமை

தினம் ஒரு கதை - பேச்சு திறமை

இதோ அந்த படத்தில் உள்ள தமிழ் Text:

---

*பேச்சுத்திறமை*

ஒரு பெரிய பல்பொருள் அங்காடியில் வேலைக்குச் சேர்ந்தான் ஓர் இளைஞன். அவனது தோற்றத்தைப் பார்த்த முதலாளிக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை. இருந்தாலும், அதிகம் விற்பனை நடக்காத ஐந்தாவது மாடியில் அவனை விற்பனையாளராகச் சேர்த்துக் கொண்டார். "ஒரு மாதத்திற்குள் குறைந்தது ஒரு விற்பனையையாவது முடிக்க வேண்டும்" என்பதுதான் அவனுக்குக் கொடுக்கப்பட்ட இலக்கு. ஆனால், மறுநாளே அவன் முதல் விற்பனையை முடித்துவிட்டு பில்லுடன் முதலாளி முன் நின்றான். பில் தொகை சுமார் 50 லட்சம் ரூபாய்.

அதிர்ச்சியடைந்த முதலாளி, "எப்படி இது சாத்தியமானது?" என்று கேட்டார். "ஒருவர் மீன் வலை வாங்க வந்தார். மீன் பிடிக்க நடுக்கடலுக்குச் செல்ல படகு தேவைப்படும் என்றேன்; படகு வாங்கினார். படகை எடுத்துச் செல்ல வாகனம் தேவைப்படும் என்றேன். அதையும் வாங்கினார். தொடர்ந்து வாகனத்திற்கான பொருட்கள், டிவி, டிவிடி பிளேயர், டெண்ட், அடுப்பு, சமையல் பொருட்கள் என தேவையான அனைத்தையும் விற்றேன். பில் 50 லட்சத்தைத் தொட்டுவிட்டது" என்றான். முதலாளிக்கு ஆச்சரியம். "மீன் வலை வாங்க வந்தவரிடம் இவ்வளவு விற்றாயா?" எனக் கேட்டார். "இல்லை, அவர் தலைவலிக்கு மாத்திரை வாங்க வந்தார். தலைவலிக்குக் காரணம் கேட்டபோது, 'வேலைப்பளு' என்றார். 'மாத்திரை சாப்பிடுவதைவிட, மீன் பிடிப்பது போன்ற பொழுதுபோக்கில் ஈடுபட்டால் மன அழுத்தம் குறையுமே' என்றேன். அப்படித்தான் ஒரு ரூபாய் வியாபாரம் 50 லட்சமாக மாறியது என்றான்.

விற்பனைக்கும் சரி, வாழ்க்கைக்கும் சரி, தேவையான முக்கியத் திறமைகளில் ஒன்று பேச்சுத்திறன். சரியான நேரத்தில், சரியான வார்த்தைகளைப் பேசத் தெரிந்தால், ஒரு சிறிய வாய்ப்பைக்கூட மிகப்பெரிய வெற்றியாக மாற்றி விட முடியும்.


Post a Comment

0 Comments