சம வேலைக்கு சம ஊதியம் ஒற்றைக் கோரிக்கை -
இந்தியாவிலேயே இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் மிக மிக குறைந்த அடிப்படை ஊதியத்தை தமிழகத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது. சமவேலைக்கு சமஊதியம் எனும் ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி செப்டம்பர் மாத இறுதியில் 48மணி நேர ஊதிய மீட்பு போராட்டம் எங்களது SSTA இயக்கத்தின் சார்பாக நடத்த திட்டமிட்டு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்து தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பேச்சுவார்த்தை முடிந்து மூன்று மாதங்கள் கடந்தும் எவ்வித மேல் நடவடிக்கை இல்லாததால கீழ்க்கண்ட மூன்று கட்ட போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
ஏற்கனவே டிசம்பர் 1 முதல் "சமவேலைக்கு சமஊதியம்' கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு சென்று வருகிறோம். இரண்டாம் கட்டமாக டிசம்பர் 5 தலைநகரில் மாபெரும் பேரணி நடத்தி முடித்தோம்.மூன்றாம் கட்டமாக டிசம்பர் 24 முதல் சென்னையில் காலவரையற்ற ஊதிய மீட்பு போராட்டங்கள் நடைபெற ஏற்கனவே திட்டமிடப்பட்டு தற்போது நிர்வாகக் காரணங்களால் டிசம்பர் 26 முதல் நடைபெறவுள்ள தகவல் தங்களுக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம். சமவேலைக்கு சமஊதிய எனும் ஒற்றைக் கோரிக்கையில் சுமூகமான தீர்வை விரைவில் ஏற்படுத்தி தருமாறு அரசை வேண்டுகிறோம்.
எஸ்.எஸ்.டி.ஏ
நன்றி..!
இப்படிக்கு,
ஜே.ராபர்ட் மாநில பொதுச் செயலாளர்
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (SSTA)
கிருஷ்ணராயபுரத்தில்
தினகரன் நாளிதழ்
இடைநிலை ஆசிரியர்கள் டிசம்பர்26ம்தேதி ஆர்ப்பாட்டம்
சக ஆசிரியர்களுக்கு அழைப்பு
கிருஷ்ணராயபுரம், டிச. 24: தமிழ்நாட்டில் 1.6.2009க்கு முன்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் களுக்கு ரூ.8,370 என்ற அடிப்படை ஊதியமும் 1.6.2009 பின்னர் நியமிக் கப்பட்ட ஆசிரியர்களுக்கு ரூ.5,200 என்ற அடிப்படை ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. ஒரே வேலையை செய்யும் இரண்டு ஆசிரி யர்களுக்கு வேறு வேறு அடிப்படை ஊதியம் அரசு வழங்ககப்படுகிறது.
தமிழ்நாடு அரசு ஆசிரி யர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்பதை வலி யுறுத்தியும் திமுகவின் தேர் தல் வாக்கு உறுதியான 311ஐ நிறைவேற்றக்கோரி இடை நிலை பதிவு மூப்பு ஆசிரியர் கள் சங்கம் டிசம்பர் 26ல்
இடைநிலை ஆசிரியர்கள் வரும் 26ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்து கொள்ள சக ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
சென்னையில் போராட் டம் நடத்த உள்ளனர்.
இதனை முன்னிட்டு அனைத்து ஆசிரியர்களை யும்போராட்டத்தில் பங்கு பெற வைக்கும் பொருட்டு கிருஷ்ணராயபுரம் மற்றும் தோகைமலை ஒன்றிய பகு தியில் பணிபுரியும் அரசு பள்ளி அனைத்து ஆசிரி யர்களுக்கும் வீடு வீடாக
சென்று அழைப்பிதழ் கொடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் செந்தில்குமார், தோகைமலை வட்டார செயலாளர் ராமராஜ் மற்றும் மகளிரணி ஒருங்கி ணைப்பாளர் நித்யா உட் பட பலர் கலந்துகொண்ட னர்.
0 Comments