'போக்ஸோ' வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ஆசிரியர் உயிரிழப்பு
நீதித் துறை நடுவர் விசாரணை
தருமபுரி, டிச. 23: போக்ஸோ வழக்கில் கைதாகி தருமபுரி சிறையில் இருந்த அரசுப் பள்ளி ஆசிரியர் செவ்வாய்க்கி ழமை உயிரிழந்தார். இதுதொடர்பா நீதித் துறை நடுவர் விசாரணை மேற் கொண்டார்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி யைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (55). (படம்) இவர் நல்லம்பள்ளிவட்டாரத் தில் அரசுப் பள்ளியில் பட்டதாரி ஆசி ரியராகப் பணியாற்றி வந்தார். மாண விக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரின்பேரில், தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த டிச. 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டு தரு மபுரி மாவட்ட சிறையில் அடைக் கப்பட்டார். சிறையில் இருந்த அவ
ருக்கு திங்கள்கிழமை நள்ளி ரவு மாரடைப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்த சிறைக் காவலர்கள், அவரை தருமபுரி அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனைக்கு சிகிச் சைக்கு அழைத்துச் சென்ற னர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட் டதாக தெரிவித்தனர்.இதையறிந்த, அவரது குடும்பத்தினர், உறவினர் கள் அவரது இறப்பில் சந்தேகம் உள் ளதாக மருத்துவக் கல்லூரி மருத்து வமனை வளாகத்தில் திரண்டு முறை யிட்டனர். இதைத் தொடர்ந்து, தருமபுரி நீதித் துறை நடுவர் எண் 1-இன் நடுவர் தமிழரசு, மருத்துவமனை வளாகத்துக்கு வந்து செவ்வாய்க்கிழமை விசா ரணை மேற்கொண்டார்.
அப்போது, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு சிறையில் இருந்து அவரை அழைத்துவந்த கண்காணிப்பு கேமராபதிவு காட்சிகள், மருத்துவமனை வளாகத்தில் அவரை அழைத்துச் செல்லும் கேமரா பதிவு காட்சிகள் காட்டப்பட்டன. இதையடுத்து அவர் கள் சமாதானம் அடைந்தனர். உடற்கூறாய்வுக்கு பிறகு அவரது உடலை பெற்றுச்சென்றனர்.
0 Comments