கல்லூரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை, டிச. 23: அரசுக் கல்லூரி களில் பணிபுரியும் ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்களுக்கு இட மாறுதல் கலந்தாய்வு அறிவிக் கப்பட்டுள்ள நிலையில், விருப்பம் உள்ளவர்கள் புதன்கிழமை (டிச.24) முதல்விண்ணப்பிக்கலாம்எனஉயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கி ழமை வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பு:
உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு கலை, அறிவியல், கல் வியியல், பொறியியல் மற்றும் பாலி டெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியா ளர்களின் நலன் கருதி நிகழ் கல்வியாண்டுக் கான பணியிட மாறுத லுக்கு பொது கலந்தாய்வு நடத்த ஆணை வெளியி டப்பட்டுள்ளது.
அதன்படி இக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குநர் கள், தொழில்நுட்பப் பணியாளர் கள் மற்றும் அமைச்சுப் பணியாளர் கள் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு டிச.24 முதல் ஜன.5 வரை இணைய வழியில் விண்ணப்பிக்க வழிவகை
செய்யப்பட்டுள்ளது.
பொது கலந்தாய்வில் கலந்து கொள்ள கல் லூரிக் கல்வி இயக்ககத் தின் கீழ் உள்ள பணி www.dcetr ansfer.in,
www.nonteaching.dcetransfer.in என்ற இணையதள முகவரியிலும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள பணியாளர்கள் www.tndotetransfer.in என்ற இணையதள முக வரியிலும் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளார் அமைச் சர் கோவி.செழியன். - நன்றி தினமணி
0 Comments