'அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு
விரைவில் நல்ல செய்தி'
திருச்சியில் திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், சிறந்த ஆசிரியருக்கு விருது வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன், மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் திமுக நிர்வாகிகள்.
திருச்சி, டிச.23: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக, கிழக்கு மாநகர திமுக கல்வியாளர் கள் அணி சார்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் சிறந்த கல்வியாளர்களுக்கு விருது வழங்கும் விழா, திருச் சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவிலும், பின்னர் செய்தியாளர்களிடமும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:
இதில் 1990-ஆம் ஆண்டுக்குப் பிறகு 9,416 வகுப்பறை கட்டடங்கள் கட்டப் பட்டுள்ளன. இதில், பழுதடைந்த, சேதமான கட்டடங்களை இடித்து அகற்றி, புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த வகையில், 7,898 வகுப்பறை கட்டடங்கள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. பழைய கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டும், சில இடங்களில் கட்ட டங்கள் விழும் சம்பவங்கள் வேதனையளிக்கிறது. மரத்தடியில் வகுப்பு நடைபெறுகிறது, சமுதாயக் கூடத்தில் வகுப்பு நடைபெறுகிறது என் றால், அங்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது என்பதை உணர்ந் கொள்ள வேண்டும். தற்காலிகமாகவே அங்கு வகுப்பறை செயல்படுகி றது. விடுமுறை நாள்களில் பள்ளிகள் கட்டாயம் எந்த வகுப்புகளையும் நடத்த கூடாது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நுழைவு வாயிலில் சிசிடிவி கேமரா பொருத்த ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
விரைவில் நல்ல செய்தி: பொங்கல் பண்டிகைக்கு குடும்ப
அட்டைக்கு பணம் வழங்குவது தொடர்பாக முதல்வர் நல்ல முடிவை அறிவிப்பார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுடன் 3 முறை பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம். அரசின் நிதி நெருக்கடி சூழலை ஜாக்டோ-ஜியோ அமைப்பிடம் கூறியுள்ளோம். பேச்சுவார்த்தை தோல்வி எனக் கூற முடியாது. ஜன. 6-ஆம் தேதியே வேலைநிறுத்தம் தொடங்குவதாக அவர்கள் கூறியுள்ளனர். இடைப்பட்ட காலத்துக்குள் அரசு ஊழியர் கள், ஆசிரியர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும் என்றார் அமைச்சர்.
இந்த நிகழ்வில், கல்வியில் சிறந்து விளங்கும் 24 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் 24 கல்லூரி பேராசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன், கவிஞர் சல்மா, மாநகராட்சியின் மண்டலக் குழுத் தலைவர் மு. மதிவாணன், கல்வியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் குணசீலன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments